சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திவுலப்பிட்டி – துன்கஹா பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 11 ஆயிரம் சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி சுமார் 7 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.