இலங்கையில் கொரோனா தொற்று மட்டுமின்றி கொரோனா அல்லாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஒருபக்கம் கொரோனா தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால் மறுபக்கம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை முதல் உடநிலை பாதிக்கப்பட்ட அவருக்கு பொதுச் சுகாதார பரிசோதகரினால் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா நோய்த் தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
இதேவேளை, கடந்த 31ஆம் திகதி நகர சபைத் தலைவர் பதவியை விலகுவதாக அவர் அறிவித்த போதும் தமிழ் அரசுக் கட்சியினால் அதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது