மீன் விற்பனை எனும் போர்வையில் கஞ்சா கடத்த முற்பட்ட இருவர் மன்னார் – இலுப்பைக்கடவை கடலோரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
131 கிலோ 725 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இன்று (10) அதிகாலை இலங்கை கடற்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த லொறியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட குறித்த கேரள கஞ்சாவின் பெறுமதி 39 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.