முல்லைத்தீவில் மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு! கைதான ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிசாரால் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் தூஸ்பிரயோக முயற்சி தொடர்பில், சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்க கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிசாரால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் 25ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, இன்று குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்த முல்லைத்தீவு நீதிபதி குறித்த நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை – இந்திய கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! இராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் கோரிக்கை

Leave a Reply