இலங்கையில் புதிய பயணக் கட்டுப்பாடுகள் அல்லது ஊரடங்கு உத்தரவு குறித்த முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் இடம்பெறும் கலந்துரையாடலைத் தொடர்ந்து, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் சாத்தியமான பயணக் கட்டுப்பாடுகள் இன்று அல்லது நாளை விதிக்கப்படும் என அறிய முடிகிறது.
நாட்டை முழுமையாக முடக்குவதற்கு அல்லது மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகளை இன்னும் கடுமைப்படுத்துவது தொடர்பிலான முக்கிய அறிவிப்பு ஒன்று, இன்னும் சில மணிநேரத்தில் உத்தியோகபூர்வமாக வெளியாகுமென உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாட்டை முழுமையாக முடக்கும் அறிவிப்பாகக் கூட அது அமையலாம் என அந்தக் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.