முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ கைது

<!–

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ கைது

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவலை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய அவர் பொரளையில் கடுவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நீதிமன்ற பெயர்ப்பலகை போன்றதொன்றை தயாரித்ததாக தெரிவித்து ஊடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டமைக்காக துமிந்த நாகமுவவிற்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply