கிளிநொச்சியில் தேனீக்கள் கொட்டியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (8) கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதில் இடம்பெற்றுள்ளது.

தேன் சேகரித்துக் கொண்டு இருந்த நேரம் தேனீக்கள் கொட்டியதில் படுகாயமடைந்த குறித்த முதியவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையில் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.