
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நிறைவடையும் வரையிலும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (10) ஆஜர்படுத்தப்பட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக ஏப்ரல் 24ஆம் திகதியன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ரிஷாட் எம்.பி கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேக நபரான முன்னாள் அமைச்சரிடமிருந்து ஐந்து மாதங்களுக்கும் மேலாக வாக்குமூலங்கள் பெறப்பட்டுவரும் நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று (10) ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.