யாழில் மேலும் 5 கொரோனா மரணங்கள்!

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும் நாவற்குழியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவரும் உரும்பிராயைச் சேர்ந்த பெண்ணொருவருமாக மூவர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.

அத்துடன், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவரும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இதனையடுத்து, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153ஆக உயர்வடைந்துள்ளது

Leave a Reply