இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, வைத்திய சாலைகளிலும் இடப் பற்றாக்குறை காணப்படுகிறது.
இந்த நிலையில், எவரும் உரிமை கோராத 40 சடலங்களை சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி ஓட்டமாவாடியில் அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
அதன்படி, 2017 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களையே புதைக்குமாறு மேற்குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.