இலங்கை அரசாங்கம், போலியான சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள் தொடர்பிலேயே அவதானம் செலுத்தியுள்ளது.
எனினும், இதில் எவ்வித தனிப்பட்ட அடக்குமுறையும் இல்லை. எதிர்க்கட்சி இதனை அரசியலாக்குகின்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
5 நட்சத்திர ஜனநாயக நாடுகள் போலியான சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் சட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளன.
சமூக ஊடகங்கள் அல்லது சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்படும் ஏதேனுமொரு கருத்திற்கு உரிமை கோருபவர்கள் காணப்பட்டால் அதில் எவ்வித சிக்கலும் இல்லை.
எனினும் ,வெளியிடப்படும் கருத்துக்களுக்கு பொறுப்பேற்பவர் இல்லையாயின் அது சகலருக்கும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
அதன் காரணமாக, இவ்வாறான கணக்குகள் தொடர்பிலேயே சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ் விடயத்தில் எவ்வித தனிப்பட்ட அடக்குமுறையும் கிடையாது என்றார்.