இம்முறை நல்லூர் கந்தன் உற்சவத்தில் சிறுவர், முதியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொரோனா பரவலை கருத்திற்கொண்டு இம்முறை நல்லூர் கந்தன் உற்சவத்தில் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் உள்நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஆண்கள் வேஷ்டியுடனும், பெண்கள் கலாசார முறைப்படியும் ஆலயத்திற்கு வருகை தருதல் கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.