நல்லூர் கந்தன் உற்சவத்தில் கலந்து கொள்ளும் அடியார்கள் தடுப்பூசி ஏற்றியதை உறுதிப்படுத்தும் அட்டைகளை கைவசம் வைத்திருப்பது கட்டாயமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் உற்சவம் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ
ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் அடியார்கள் முழுமையாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முகக்கவசங்கள் அணிவதோடுஇ தடுப்பூசி ஏற்றியதை உறுதிப்படுத்தும் அட்டைகளை கைவசம் வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அடியார்கள் வரையறுக்கப்பட்ட அளவில் உள்நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
எனினும் ஆலய வளாகத்தினுள் தரித்து நிற்கவோ அல்லது அமரவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
உரிய வகையில் சமூக இடைவெளியுடன் வழிபாட்டை மேற்கொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.