நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகள் வெளியாகவுள்ளன.
மேலும் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரம் பங்கேற்க அனுமதி வழங்கப்படுமெனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.