கிளிநொச்சியில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாளுக்கு நாள் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது.

மேலும் இந்த நிலையில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும், சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு தேவையற்ற நடமாட்டங்கள், கூடுகைகள், கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பாக மரண சடங்குகளில் மக்கள் கூடுகை அதிகரிக்கின்றமையை உணர முடிவதாகவும், இந்நிலை தொடர்ந்தால் பாரிய ஆபத்தான நிலை ஏற்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று ஆபத்திலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும், விட்டமின் C அடங்கிய பழங்கள் மற்றும் உடன் மரக்கறி வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

அத்தோடு தனி மனித பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்பின் ஊடாகவே மாவட்டத்தின் அபாய நிலையிலிருந்து மீள்வதற்கு சிறந்த வழி எனவும், அதை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

Leave a Reply