டொலர் பற்றாக்குறை – சோள இறக்குமதியும் இடைநிறுத்தம்!

டொலர் பற்றாக்குறை காரணமாக சோளத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய மிருகவள அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த சபையினால் பராமரிக்கப்படும் கால்நடைகளுக்கு அவசியமான ஆயிரத்து 500 மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்வதிலேயே சிக்கல் நிலவுவதாக அந்த சபையின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள சுமித் கமகே தெரிவித்துள்ளார்.

சோளத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஆயிரத்து 500 மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைத்ததாகவும் எனினும் டொலர் பற்றாக்குறை காரணமாக அதனை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து, பயிர்ச்செய்கையாளர்களிடம் இருந்து சோளப் பயிரைக் கொள்வனவு செய்து கால்நடைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிருகவள அபிவிருத்தி சபையின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள சுமத் கமகே தெரிவித்துள்ளார்.

Leave a Reply