டொலர் பற்றாக்குறை: சோள இறக்குமதியும் இடைநிறுத்தம்!

டொலர் பற்றாக்குறை காரணமாக சோளத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய மிருகவள அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த சபையினால் பராமரிக்கப்படும் கால்நடைகளுக்கு அவசியமான ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதிலேயே சிக்கல் நிலவுவதாக அந்த சபையின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள சுமித் கமகே தெரிவித்துள்ளார்.

சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைத்துள்ளபோதிலும், அதனை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பயிர்ச்செய்கையாளர்களிடம் இருந்து சோளப் பயிரைக் கொள்வனவு செய்து கால்நடைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இ.போ.ச. பேருந்தின் மீது இனம்தெரியாத கும்பல் கல்வீச்சு!

Leave a Reply