மோட்டார் சைக்கிள் – டிப்பர் மோதி விபத்து: ஸ்தலத்தில் பெண் பலி!

மீபே – இங்கிரிய வீதியில் நேற்று மாலை, மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 50 வயதுடைய பாலிந்தநுவர பிரதேச சபை உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில், டிப்பர் வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில், மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிண்ணியாவில் படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நிதியுதவி!

Leave a Reply