இலங்கை 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது! பசில்

இலங்கை இந்த ஆண்டில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சிங்கள வார இதழொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு அரசாங்கத்தினால் குறித்த கடனை உரிய முறையில் திருப்பி செலுத்த முடியும்.

செலுத்தப்பட வேண்டிய கடன் தவணைகள் இதுவரையில் எவ்வித பிரச்சினையும் இன்றி செலுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இவ்வாறே செயற்படுகின்றோம்.

கடன் செலுத்தப்படும் அதேவேளை, மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் 12 பேர் மன்னார் நீதிமன்றத்தால் விடுவிப்பு!

Leave a Reply