உ.கிழங்கு, வெங்காயம் விலை சரிவு!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றின் வர்த்தகப் பொருள்களுக்கான வரி குறைக்கப்பட்டதே இதற்கான காரணமாகும்.

நிதியமைச்சு கடந்த 31 ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட உருளை கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் சம்பந்தமாக சுங்கவரியை 30 ரூபாவால் குறைத்திருந்தது.

சந்தையில் இவற்றுக்கு இருந்த விலையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *