வயிற்றைக் கிழித்தது மாடு: வளர்த்தவர் பரிதாபச் சாவு!

கோவில் மாடுகளைப் பராமரிக்கும் நபரின் வயிற்றை, ஒரு மாடு கொம்பால் குத்தி வயிற்றைக் கிழித்திருந்தநிலையில், அவர் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில், வேலணை 4ஆம் வட்டாரம் மண்கும்பானைச்சேர்ந்த நல்லையா கணேஸ்வரன் (வயது – 68) என்பவரே உயிரிழந்தார்.

அவர், மண்கும்பான் பிள்ளையார் கோவில் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றிவந்தார். அவரே கோவில் மாடுகளையும் பராமரித்துவந்தார். கடந்த 29ஆம் திகதி அவர், கோவில் மாடு ஒன்றின் கயிற்றை அவிழ்க்கச்சென்றபோதே மாடு கொம்பால் குத்தியது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோதும், சிகிச்சை பயனளிக்காது நேற்றுக்காலை உயிரிழந்தார். மருத்துவமனையில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை மேற்கொண்டார்.

Leave a Reply