நைஜீரியாவில் சிறையை உடைக்க முயற்சி – இருவர் சுட்டுக்கொலை

நைஜீரியாவின் தென்மேற்கு ஓசுன் மாநிலத்தில் உள்ள கோசரே சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில கைதிகள் சிறை பாதுகாவலரை தாக்கிவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற முற்பட்டபோது இடம்பெற்ற இந்த சமபவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த சிறைக்காவலர் சிகிச்சை பெற்று வருகிறார், அவரது உடல்நிலை சீராக உள்ளது. என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், நைஜீரியாவில் நூற்றுக்கணக்கான கைதிகள் சிறைகளை உடைத்து தப்பியோடிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply