சதொச மோசடி – யாரும் தப்ப முடியாது என்கிறார் அமைச்சர்

சதொசவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடியிருந்து யாரும் தப்ப முடியாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் அனைத்தும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதற்கு காரணம் கொவிட் தொற்று ஆகும்.

இன்று இலங்கை சதோச நிறுவனம் இலாபகரமான நிறுவனமாக காணப்படுகிறது.

நீங்கள் அறிந்தது சதோச இழுத்து மூடிய காலம் காணப்பட்டது. பின் மஹிந்த அரசில் லங்கா சதோச என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட போதும் லங்கா சதோசவுக்கு நஷ்டமே கிடைத்தது. 2015 பின் மீண்டும் இதே நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நான் மேற் கொண்ட விடயம், முதல் நாள் இரவு, என்ன நடந்தது என்று ஒவ்வொரு நாளும் விசாரிப்பது.

இவ்வாறு நான் மேற் கொண்ட நடவடிக்கையில் சதொச கணினி மயமாக்கப்பட்டது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சதோச பல மோசடிகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply