பேருந்தில் பயணித்த பெண் திடீர் உயிரிழப்பு..!

பேருந்தின் இருக்கையில் இருந்தவாறே பெண் ஒருவர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஹொரணையில் இருந்து பாணந்துறைக்கு மாலை பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனது இருக்கையில் இறந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தூங்கிக் கொண்டிருப்பதாக சந்தேகத்தில் பேருந்தில் பெண்ணை நடத்துனர் விசாரித்திருந்தார். எனினும் பின் இறந்ததென தெரிந்ததால் பேருந்து பாணந்துறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 60 அல்லது 65 வயதிற்குட்பட்ட அந்த பெண் பற்றி தமக்கு எந்த தகவலும்கிடைக்கவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.

Leave a Reply