டிக்டொக் கொலை விவகாரம்; ஆறு சிறுவர்களும் விளக்கமறியலில்..!

டிக்டொக் வீடியோவில் ஆர்வம் காட்டிவந்த 17 வயது இளைஞளை கத்தியால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 06 சிறுவர்கள் கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனா்.

இந்நிலையில் அவர்களை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி சில்வா இன்று (05) உத்தரவிட்டுள்ளாா்.

இவர்கள் ஆறு பேரையுத் சிறைச்சாலை பாதுகாப்புடன் மாகொல சிறுவர் காப்பகத்தில் தடுத்து வைக்குமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டுள்ளாா்.

இதேவேளை, 12 தொடக்கம் 16 வயதுக்கிடைப்பட்டவர்கள் என கிராண்ட்பாஸ் பொலிஸாா் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனா்.

Leave a Reply