கிழக்கு ஆளுனரால் கிண்ணியாவில் அரச ஒசுசல மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் குட்டிக்கராச்சி சந்தியில் கூட்டுறவு விற்பனை நிலையமும், ஒசுசல மருந்தகமும் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் கலந்து கொண்டு இன்று(05) மாலை இதனை உத்தியோகபூந்வமாக திறந்து வைத்தார்.

மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த அரச ஒசுசல மருந்தகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டுறவு விற்பனை நிலையத்தில் மொத்தமாகவும் சில்லறையாகவும் அத்தியவசிய பொருட்கள் உட்பட பல தேவைகளை மக்கள் இதன் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.

குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கபில நுவன் அத்துகோரள, எம்.எஸ்.தௌபீக் மற்றும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, கிண்ணியா நகர சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply