மன்னாரிலும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

மன்னார் – தரவான் கோட்டை பகுதியில் இன்று வியாழக்கிழமை (06) நண்பகல் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தரவான் கோட்டை பகுதியை சேர்ந்த கூலி தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவரின் வீட்டிலேயே மேற்படி வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது குறித்த பெண் அதிர்சியில் மயக்கமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மன்னார் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் நகரசபை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Leave a Reply