
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய கட்டுமாண பணிகள் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் தொகை மற்றும் துறைமுக அதிகார சபையின் முதலீட்டிலும் குறித்த கட்டுமாண பணிகள் இடம்பெறவுள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் பெற்றும், துறைமுக அதிகார சபையின் 510 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டிலும் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.





