பொது இடங்களில் கோவிட் தடுப்பூசி அட்டைகளை கட்டாயம்! சட்ட தயாரிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தில்…!

பொது இடங்களுக்கு பிரவேசிப்போர் கோவிட்-19 தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் வைத்திருக்கவேண்டும் என்பது
தொடர்பான சட்ட தயாரிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

இது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், பூஸ்டர் எனப்படும செயலூக்கி தடுப்பூசியை அனைவரும் பெற்றுக் கொள்ளவேண்டும்
என அவர் வலியுறுத்தினார்.

இரண்டாவது தடுப்பூசியை செலுத்திய பின்னர், முதல் 3 மாதங்களில் மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த தடுப்பூசி செலுத்தல் மூலம் பல்வேறுப்பட்ட நோய் அறிகுறிகள் ஏற்படுவதாக வெளியான தகவல்
இதுவரை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் மேலும் கூறினார்.

Leave a Reply