இரவோடு இரவாக இலங்கை அரசு செய்யும் காரியம்! முஜிருப் ரஹ்மான் எம்.பி.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை காரணம் காட்டி இரவோடு இரவாக, நாட்டின் வளங்கள் விற்கப்படுவது எமக்கு தெரியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிருப் ரஹ்மான் தெரிவித்தள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமக்கு தெரியும் நம் கனிய எண்ணெய் வள அமைச்சர் திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை இந்தியாவிற்கு வழங்க உத்தேசித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்காக இந்தியாவிடம் உதவியை பெற்று கொள்ள சென்ற போது அந் நாட்டினரின் கோரிக்கையில் ஒன்றாக காணப்பட்டது இவ் எண்ணெய் கிடங்கு உடன்படிக்கை.

மற்றுமொரு கோரிக்கைதான் மத்தள விமான நிலையம். இது குறித்து இந்தியாவில் வுhந ர்iனெர பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சர் இந்தியா சென்றதை அடுத்து தற்போது கனிய எண்ணெய் வள அமைச்சர் இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டு, இந்தியாவின் உதவியை நாடியதால் இன்று எண்ணெய் கிடங்குகளை இந்தியாவிற்கு வழங்கவுள்ளனர்.

நம் நாட்டில் இரவில்தான் அறிக்கை கைச்சாத்திடப்படுகிறது. அதேபோல தான் இவ் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அரசாங்கம் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் போல, இரவில் கைச்சாத்திட்டால் தெரியாது என்று, இது முட்டாள் தனமாக உள்ளது.

எனவே, உதய கம்மன்பிலவுக்கு நான் கூறுகிறேன், அன்று நிதி அமைச்சர் செய்த பிழையை தான் இன்று நீங்கள் செய்கிறீர்கள் – என தெரிவித்துள்ளார்.

மருந்து கொள்வனவுக்கு கடன் பெற இரு நாடுகளுடன் இலங்கை பேச்சு!

Leave a Reply