மன்னார் குருஸ் கோவில் பகுதியில் பணம் நகை திருட்டு!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருஸ் கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று நள்ளிரவு இனம் தெரியாத நபர்களால் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டின் உரிமையாளர் ஒரு வாரத்திற்கு முன்பாக புதிய வீடு ஒன்றுக்கு இடம் மாறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டு வந்த நிலையில், முன்னதாக வசித்து வந்த பூட்டப்பட்ட வீட்டின் கதவை சூட்சமான முறையில் திறந்து வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் மற்றும் மடிக்கணனி உட்பட பல பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இதுதொடர்பில், பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்ட நிலையில் மன்னார் பொலிஸார் மற்றும் SOCO பொலிஸ் பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

அண்மைக்காலமாக மன்னார் பொலிஸ் பிரிவில் ஆட்கள் இல்லாத வீடுகளில் அதிகளவான திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

அரசாங்கத்திற்கு இராணுவ ஆட்சிக்கு கொண்டு செல்வது தொடர்பான எண்ணம் இல்லை! எதிர்கட்சி தலைவர்

Leave a Reply