யாழ். இந்திய துணை தூதுவரை சந்தித்த ஜே.வி.பி!

யாழ்ப்பாண கடல் பரப்பில் இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் தொடர்பாக, மக்கள் விடுதலை முன்னணியால் மகஜர் ஒன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதுவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண கடல் பரப்புகளில் தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்து மீறல் அதிகரித்து வருகிறது.

மீனவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான, குழுவினர் குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.

நல்லூர் கந்தனின் பரிபாலகரின் சிறப்பு நூல் வெளியீடு

Leave a Reply