ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல்: 25 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 25 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சதி, உதவி செய்தல், வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்களை சேகரித்தல், கொலை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்ற தீர்ப்பாயத்தை அமைக்குமாறு சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரியுள்ளார்.

நெளபர் மெளலவி, சாஜித் மெளலவி, மொஹம்மட் மில்ஹான், சாதிக் அப்துல்லாஹ், கபூர் மாமா எனும் ஆதம் லெப்பை, மொஹம்மட் சம்சுதீன், மொஹம்மட் ரிஸ்வான் உள்ளிட்ட 25 குற்றவாளிகளுக்கு எதிராகவே இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கந்தான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கட்­டு­வாப்பிட்டி – புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சீயோன் தேவாலயம் உள்ளிட்ட கொழும்பில் உள்ள முக்கிய ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் உயிரிழந்ததுடன், 594 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *