டெல்டா பரவல்-அதிவுயர் அபாய மாவட்டமாக மாறிவரும் மாவட்டம்?

கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரையான காலப் பகுதியில் கம்பஹா மாவட்டம் அதிவுயர் அச்சுறுத்தல் மிக்க மாவட்டமாக மாறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் உறுதிப்படுத்திய தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, குறித்த காலப் பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் 12,555 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

அத்தோடு 7ஆயிரத்து 3 பேர் தமது வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட கொரோனா தடுப்பு குழுக் கூட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

மேலும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள 12,555 பேரில் 4,046 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 2020ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையான காலப் பகுதியில் கம்பஹா மாவட்டத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 1ஆயிரத்து 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply