
இலங்கையில் சுகாதார அமைச்சர் பதவிக்கு பொருத்தமான வேறு ஒருவரை மிக விரைவில் நியமிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அப்பதவியில் இருக்கும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தனது பதவியை இழக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி டெய்லி எப்டி செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய அமைச்சராக தற்போதைய அமைச்சரவையில் இருந்து தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இது குறித்து உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.