நியூசிலாந்து உயர் ஸ்தானிகருடன் பிரதமர் கலந்துரையாடல்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று (11) இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது, இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply