ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தை ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கணக்காளர் பிரிவில் பணியாற்றும் ஊழியர் மற்றும் சாரதி ஆகியோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply