கோவாக்சின் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் புதிய பிறழ்வுகளுக்கு எதிராக சிறப்பாக செயற்படுகிறது – பாராத் பயோடெக்

தற்போது பரவி வருகின்ற டெல்டா, ஒமிக்ரோன் தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் மிகச் சிறப்பாக செயல்படுகிறது என பாராத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து குறித்த நிறுவனத்தின் தலைவர் டொக்டர் கிருஷ்ண இலா கூறுகையில், ஒரு முறை உருமாறியுள்ள கொரோனா வைரஸ் முதல், பலமுறை உருமாறியுள்ள கொரோனா வைரஸ் வகைகளுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி மிகச் சிறப்பாக செயல்படுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதுடன், நோய் கிருமிகளுக்கு எதிராக போராடும் ஆன்டிபாடிஸ் எனப்படும் இரத்தம் உருவாக்கும் பொருள் உற்பத்தியை வேகப்படுத்துகிறது.

இதன் பூஸ்டர் தடுப்பூசி டெல்டா, மற்றும் ஒமிக்ரோன் வகைகளுக்கு எதிரகா சிறந்த பலனை அளித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply