
பரசூட் செயலிழந்ததில், 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த ரஷ்ய பிரஜையொருவர் படுகாயமடைந்துள்ளார்.
கண்டி, தெல்தொட்ட லூல்கந்துர பிரதேசம், கொண்டகலை மலைப் பகுதியில், நேற்று பரசூட்டில் இருந்து குதித்த ரஷ்ய பிரஜை ஒருவர், பரசூட் செயலிழந்ததன் காரணமாக சுமார் அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், பேராதனை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செயலிழந்த பரசூட் மரக்கிளையொன்றின் மீது விழுந்து நிலையில் மரக்கிளை முறிந்ததில் குறித்த நபர் கீழே விழுந்துள்ளார்.
இது தொடர்பில், பிரதேச மக்கள் கலஹா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதுடன், அம்பியுலன்ஸ் சேவையினூடாக குறித்த நபரை பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ரஷ்ய பிரஜை, நேற்று முன்தினம் மாலை 3.00 மணியளவில் பரசூட் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் அவரது முதுகெலும்பு, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகமான வெளிநாட்டுப் பயணிகள், குறித்த மலைப்பகுதியில் பரசூட் பயணத்தை மேற்கொள்வதாகவும் பரசூட் பயணத்தை மேற்கொள்வதற்கு இந்த மலைப்பகுதி மிகவும் பிரசித்திப்பெற்றது என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

