சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

காலி – தெவெட பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஒருதொகை சிகரட்டுகளுடன் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாமிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சட்டவிரோத குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 13,300 வரியில்லா சிகரெட்டுகள் மீட்கப்பட்டதுடன், காலி துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply