கிளிநொச்சியில் வாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சிப் பகுதியில் வாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமையவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி, தருமபுரம் – வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் வைத்தே நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு சந்தேக நபர்களும் வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் தருமபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் என தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஒத்திவைப்பு ஜனநாயகத்துக்கு அடிக்கப்பட்ட சாவு மணியாகும்! இராதா சீற்றம்

Leave a Reply