
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) வருடாந்த கூட்டமானது இலங்கையில் 3,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய, 2022 மே 2ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாட நேற்று வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார செயலாளரான ஜயநாத் கொலம்பகே தலைமையில் கூட்டமொன்று இடம்பெற்றது.

