கிழக்கில் இன்றுவரை 393 மரணங்கள்-வெளியானது முழு விபரம்..!

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 227 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கிழக்கில் இன்றுவரை 393 மரணங்கள் பதிவாகியுள்ளன.அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் அதிகளவிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் 1 .30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்தும் கிழக்கு மாகாண கொரோனா நிலவரங்கள் தொடர்பில் கருத்துரைக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 837 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் ஐந்து மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலாக அம்பாற பிராந்திய சுகாதார சேவை பிரிவில் 227 பேர் கொரோனா தொற்றாளர்களாக இணங்காணப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பில் 342 பேரும், ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 163 பேரும் மூன்று மரணங்களும், கல்முனையில் 105 பேரும் ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மூன்றாவது அறையில் கிழக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலான எண்ணிக்கையாகும்.

மூன்றாவது அலையில் மொத்தமாக 20 ஆயிரத்து 204 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 393 மரணங்களும் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் வழங்கிய தடுப்பூசிகளின் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு லட்சம் பேருக்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பிரிவில் 188743 மட்டக்களப்பு 301281,அம்பாரை மாவட்டத்தில் 129590 முதல் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கொடுக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் இரண்டாவது முறையும் வழங்கி 4 அல்லது 5 கிழமைகளின் பின்பு குறிப்பிடத் தக்க பாதுகாப்பு உடலில் ஏற்பட வாய்ப்புண்டு.

ஆகவே தடுப்பு மருந்துகள் பெற்று விட்டோம் என நினைத்து நினைத்து படி நடப்பதே முற்றாகத் தவிர்க்க வேண்டுமெனவும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு விஷேடமாக சனம் ஒன்று கூடும் இடங்கள் திருமண வைபவங்கள், பொழுதுபோக்கு, ஒன்றுகூடல்கள், முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.

மேலும் ஒரு சில இடங்களுக்கு தவிர்க்க முடியாமல் போக வேண்டி வந்தாலும் ஒருவருக்கு ஒருவர் இரண்டு மீட்டர் தூரத்தை பேணுவதுடன், முறையாக முகக்கவசம் அணிவதும் அடிக்கடி மணிக்கட்டு உட்பட கைகளை நன்றாக தேய்த்து கழுவுவதும் அவசியமாகும் எனவும் கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ ஆர்.எம்.தௌபீக் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *