வடக்கில் ஸ்தம்பிதமடைந்த புகையிரத சேவைகள் !

நாடு பூராகவும் உள்ள புகையிரத நிலைய பொறுப்பு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டத்தின் காரணமாக, வடக்கிற்கான புகையிரத சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இன்று காலை கொழும்பிற்கு செல்ல இருந்த புகையிரதம் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக புகையிரத நிலைய சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆசன முற்பதிவினை மேற்கொண்ட பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துடன், கொழும்புக்குப் பயணம் செய்ய யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு வருகை தந்த பலரும் ஏமாற்றத்துடன் வீடுதிரும்பியுள்ளனர்.

நாளைய தினம் தமிழர்களின் தைப்பொங்கல் திருநாள் என்பதால் வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் கடமை புரிவோர் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்காக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *