புதுமாத்தளன் கடற்கரையில் தென்பட்ட உழவு இயந்திர பாகங்கள்

புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் கடந்த கால யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட உழவு இயந்திரத்தின் பாங்கள் சில கரையில் அடையாளம் காணப்பட்டது.

முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்கரைபகுதியில் மண்ணுள் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இம்மாதம் 08ம் திகதி அன்று இனங்காணப்பட்ட நிலையில், அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த இடத்தில், உழவு இயந்திரத்தின் பெரிய ரயர்கள் உள்ளிட்ட பாகங்கள் கடற் கரையில் தென்பட்டுள்ளதுடன் இரும்பு துண்டுகளும் இனங்காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன், உழவு இயந்திரத்தின் பாகங்களை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டிப்பார்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்திருந்தனர்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த பகுதியில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது பொலிஸார் இராணுவத்தினர் கடற்படையினர் கிராம அலுவலர் நீதிமன்ற பிரதிநிதிகள் என பலர் முன்னிலையில் இந்த அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது .

இதன்போது உக்கிய நிலையில் உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில காணப்பட்ட நிலையில் அகழ்வு பணி நிறைவடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *