இலங்கைக்கு 102 ஆவது இடம் – முதலிடத்தில் யார் தெரியுமா ?

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் இலங்கைக்கு 102வது இடம் கிடைத்துள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை ஹென்லி வெளியிட்டுள்ளது.

111 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் இலங்கைக்கு 102வது இடம் கிடைத்துள்ளது.

குறித்த பட்டியலில் இலங்கை, லெபனான் மற்றும் சூடான் நாடுகளுடன் 102வது இடத்தை பிடித்துள்ளது. அதற்கமைவாக இலங்கை கடவுசீட்டு வைத்திருப்பவர்கள் 41 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைவாக இந்த பட்டியலில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் கடவுசீட்டுகள் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

குறித்த நாடுகளின் கடவுசீட்டுகளை கொண்டு 190 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாலாவது அரசியல் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு நாடகம் ஆரம்பம்! கஜேந்திரகுமார் எம்பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *