மீண்டும் கொரொனா அலை ஏற்படும் அபாயம் – வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரிக்கை!

நாட்டில் மீண்டும் கொரொனா அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று(13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த இரு வாரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை, சற்று அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக மீண்டும் கொரொனா அலை ஏற்படக்கூடும் என்ற ஐயம் நிலவுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் ஒமைக்ரொன் திரிபுடனான கொரொனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒமைக்ரொன் திரிபானது மிக இலகுவாக பரவக்கூடியது.அறிகுறிகள் குறைந்துள்ள போதிலும், பெரும்பாலானோருக்கு அந்த திரிபு தொற்றக்கூடும் என தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *