
கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனையால் வருடாவருடம் நடாத்தப்படும் பொங்கல் விழா இம்முறையும் சுகாதார நடைமுறை களுடன் கல்முனை மாநகரில் இடம்பெற்றது.
இளைஞர் சேனையின் தலைவர் ந. சங்கீத் தலைமை இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக M.A. டக்ளஸ் (அரசாங்க அதிபர், அம்பாறை), சர்வ மத தலைவர்கள், V. ஜெகதீசன் (மேலதிக அரசாங்க அதிபர், அம்பாறை), R.M.V.J. இரத்னநாயக்க (சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், அம்பாறை), பிரிகேடியர் அபயகோன் (பிரிகேடியர் தளபதி), T.J.அதிசயராஜ், (கல்முனைக் வடக்கு பிரதேச செயலாளர்), H.M.A.P.ஹேரத் (பொலிஸ் அத்தியட்சகர், அம்பாறை), M.L.புத்திக்க (உதவி பொலிஸ் அத்தியட்சகர், கல்முனை), Dr.L.புஸ்பலதா (வைத்தியர்), M.றகீம் (தலைமை நிலைய பொறுப்பதிகாரி, கல்முனை), மேஜர் சிறிசேன (கட்டளையிடும் அதிகாரி, 18 VIR பிரிவு), K. ஜெயராஜ்(மாவட்ட கலாசார உத்தியோகத்தர், அம்பாறை), V.வசந்தி(கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர், கல்முனை வடக்கு) ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கல்முனை மாமாங்க வித்தியாலய மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

