இலட்சம் பொதிகளோடு இலங்கைக்கு வருகிறது சீமெந்து கப்பல்!

நாட்டில் டொலர் பற்றாக்குறை காரணமாக சீமெந்து இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டனர்.

அத்துடன், முன்னைய காலத்தை விடவும் தற்போது சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறான நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி இரண்டு இலட்சம் சீமெந்து பொதிகளைத் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டுக்கு வரவுள்ளது.

எனவே, எதிர்வரும் 22 ஆம் திகதியின் பின்னர் சீமெந்து தட்டுப்பாடு குறைவடையும் என மேலும் தெரிவிக்கின்றனர்.

1,400 பில்லியன் ரூபா பணத்தை அச்சடித்துக் குவித்த இலங்கை! மத்திய வங்கி ஆளுநர் ஒப்புக்கொண்டார்

Leave a Reply