கல்லிலே ஈரம் விழிப்புணர்வு குறுந்திரைப்படம் வெளியீடு

அதிகார துஸ்பிரயோகத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை வெளிகொணரும் முகமாக மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் தயாரிப்பில் சர்வமத பிரிவுகளோடு இயக்குனர் டிலைக்ஸனின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட “கல்லிலே ஈரம்” விழிப்புணர்வு குறுந்திரைப்படம் வைபவரீதியாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது

அதிகார துஸ்பிரயோகம் காரணமாக பாதிக்கப்படும் ஏழைக்குடும்பங்களின் நிலை தொடர்பாக இளைஞர்களின் பார்வையில் உருவாக்கப்பட்ட குறித்த குறுந்திரப்படம் கொரொனா பாவல் காரணமாக யூரியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது

இளம் இயக்குனர் டிலைக்ஸனின் இயக்கத்தில்,ஜெருஸனின் ஒளிப்பதிவில் கவின்சனின் வடிவமைப்பில் ஷங்கர்,அகிம்சன்,குழந்தை நட்சத்திரமாக செறோன், ஹென்றி,டிவைன்சி,நிஸாம்,நிஜந்தன்,சாம் ஆகியோரின் நடிப்பில் குறித்த படம் உருவாக்கப்பட்டுள்ளது

கடந்த வருடம் குறித்த குழுவினர் உருவாக்கிய faminisam என்ற ஆவணப்படம் மாவட்ட ரீதியில் சிறந்த படைப்பாக தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *